ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’…

Must read

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியல் இன்று வெளியிட்ப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து 276 படங்கள் இடம்பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படமும் உள்ளது.

இறுதிப் போட்டிக்குப் தேர்வாகும் படங்களின் விவரம் பிப்ரவரி 8 ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த பட்டியலில் தமிழில் இருந்து ‘ஜெய் பீம்’ தவிர மலையாளத்தில் இருந்து மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரக்கார் அரபிக் கடலிண்டே சிம்மம்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 366 படங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த ஆண்டு 276 படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article