சென்னை: கொரோனாதொற்று பாதிப்பில்இருந்தமீண்ட, விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும், அண்மையில் கொரோனா உறுதியானதால் அவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர், சிகிச்சையில் அவர்களுக்கு தொற்று உறுதியானதால், கடந்த 2ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு, விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், விஜயகாந்த் 2வது கட்ட பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்திரும், மியாட் மருத்துவமனையும் அறிவித்தது.
மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம், அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.