ண்டிகர்

சாமியார் குர்மீத் ராம்ரஹிமால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜ் சவுகான் என்பவர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்துள்ளார்.

பலாத்கார வழக்கில் 20 வருட சிறை தண்டனை பெற்றுள்ள ராம்ரஹீம் மீது அவருடைய சீடர்கள் பலருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது,  ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரும், இந்த வழக்கை 2012ல் தொடர்ந்தவருமான ஹன்ஸ்ராஜ் சவுகான் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது :

“எனது பெற்றோர்கள் பாபா (குர்மீத் ராம் ரஹீம்) வின் பக்தர்கள்.  நானும் சிறு வயது முதலே அவரின் பக்தனாக இருந்தேன்.  சிறு வயதில் இருந்தே அவர் மீது கொண்ட பக்தியினால் நானும் ஆசிரமத்தில் அவருடைய சீடராக ஆனேன்.   எனக்கு இசையில் விருப்பம் என்பதனால் ஆசிரமத்தின் சவுண்ட் சிஸ்டங்களை நான் கவனித்து வந்தேன்.  நான் இசைக்கருவிகளை வாசிக்கவும், பாடவும் பயிற்சி பெற்றேன்.  சிறிது சிறிதாக பாபாவின் சீடர்களில் முக்கியமான ஒருவன் ஆனேன்.

பாபா அடிக்கடி தன்னுடன் நெருங்க வேண்டும் எனில் தியாக செய்ய தயாராக இருக்க வேண்டும் என சொல்வார்.  அப்போது அவர் தியாகம் என சொல்வது ஆண்மை நீக்கம் செய்துக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியவில்லை.  கடந்த 1999ஆம் வருடம் ஆசிரமத்திலுள்ள ஒரு குதிரைக்கு பரிசோதனையாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் அது இறந்து விட்டது.  பிறகு அந்த பரிசோதனை மனிதருக்கும் தொடரப்பட்டது,

ஆசிரமத்தின் மூத்த பணியாளர் ஒருவருக்கு முதலில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது.  பிறகு நான் உட்பட சுமார் 18-20 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது.   அவர்களில் மைனர் சிறுவர்களும் அடக்கம்.  எங்களிடம் அது அறுவை சிகிச்சை என சொல்லாமல் ஒரு உடல் பரிசோதனை என சொல்லப்பட்டு ஆண்மை நீக்கப்பட்டது.  அதன் விளைவாக என்னால் இன்றுவரை சாதாரண முறையில் பல விஷயங்களில் செயல் பட முடியவில்லை.  எனக்கு அப்போது 20 வயது இருக்கும்.   ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் பகுதியில் தேரா சச்சா மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது.

சிகிச்சை முடிந்த உடனேயே பல பின் விளைவுகளால் நான் மிகவும் துயருற்றேன்.  ஆசிரமத்தை விட்டு வெளியேறி விட்டேன்.  ஆனால் ஆசிரம நிர்வாகம் என்னை திரும்ப ஆசிரமத்துக்கு அழைப்பதற்காக ஒரு புதிய கிட்டார் ஒன்றை பரிசாக அளித்தது.   ஆனால் நான் மீண்டும் ஆசிரமத்துக்கு செல்லவில்லை” என்று கூறினார்.

கடந்த 2012ஆம் வருடம் ஜூலை மாதம் ஹன்ஸ்ராஜ் சவுகான் இது குறித்து பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தார்.  அதற்குப் பின் 2014ல் இந்த வழக்கு சி பி ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இன்னும் இந்த வழக்கு முடியவில்லை.