டில்லி,

ண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் வெளிவரும் என்று தெரிவித்தார்கள். ஆனால் மொத்த பணத்தில் 1 சதவிகிதமே திரும்பி வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது வெட்க கேடான செயல் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார்.

கடந்த ஆண்டு மோடி தலைமையிலான மத்தியஅரசு ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்தது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

ஆனால் மத்திய அரசு, ”பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் வெளிவரும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் சமீபத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்,

‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், 99 சதவிகிதம் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டது’ என்று கூறி உள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

பணமதிப்பிழப்பு நடவடிக்கை யோசனை வழங்கிய ரிசர்வ் வங்கியின் செயல் வெட்ககேடானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

பணமதிப்பு நீக்கத்திற்கு பின் மொத்த பணத்தில் 1 சதவீதம் மட்டும் தான் திரும்பி வந்துள்ளது.

புதிய நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி ரூ.21 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.

இது எந்த ஒரு நாட்டிலும் நடக்காத ஒன்றாகும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை யால் ஏராளமான மக்கள் உயிர் இழந்தனர். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள் ஆகியோர் தங்களது உயிரை இழக்க நேரிட்டது.

இந்த நடவடிக்கையால், 3 லட்சம் கோடி ரூபாய் ஜி.டி.பி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை க்கு பின்னுள்ள மறைமுகக் காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.