ஹன்சிகாவின் கடைசித் தமிழ் படம், 100. அதர்வா நடித்து 2019-ல் வெளிவந்தது.

ஹன்சிகாவின் ஐம்பதாவது படமான மஹா முடிந்து சமீபத்தில் டீஸரும் வெளியானது. இந்நிலையில், ’மை நேம் இஸ் ஸ்ருதி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நேற்று முன்தினம் இதன் பூஜை நடந்தது.

ஸ்ரீனிவாஸ் ஓம்கார் படத்தை இயக்குகிறார். மஹா போன்று இதுவும் நாயகி மையப்படம் என தெரிகிறது . ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதை மையமாக வைத்து உருவாக்க இருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.