நடிகர் பொன்வண்ணன், நடிகை சரண்யா தம்பதியின் மூத்த மகள் ப்ரியதர்ஷினிக்கும், விக்னேஷ் என்பவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து சென்னையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை அடுத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார்.
திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை ஸ்டாலின் பரிசாக கொடுப்பது பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், கனிமொழி , தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.