சென்னை: மாற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம் என  தமிழக அரசு. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என பயன்படுத்தப்படாது. இனி, மாற்றுத்திறனாளிகள் என மட்டும் குறிப்பிட்டால் போதும். இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையின்போது, மாற்றுத்திறனாளிகளின் வகை கேட்கப்படாது. மாற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி காதுகோளாதோர், வாய்பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது இனி பயன்படுத்தக்கூடாது; அதற்கு பதில் மாற்றுத்திறநாளிகள் என்றுதான பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி, அதன்மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.