லக்னோ:

வாக்குப்பதிவு எந்திரத்தில் சதி இல்லாமல் இருந்திருந்தால் இடைத்தேர்தல் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் மேலும் அதிகரித்திருக்கும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவிததுள்ளார்.

உ.பி.மாநிலம் கோரக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்துவது தான் சரியாக இருக்கும்.அப்போது தான் மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

வாக்குப் பதிவு எந்திரங்கள் பிரச்னை இன்றியும், நேரத்தை வீணடிக்காமலும் இருந்திருந்தால் சமாஜ்வாடி வேட்பாளர்கள் வெற்றியின் வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகரித்திருக்கும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே பல எந்திரங்களில் வாக்குகள் பதிவாகியிருந்தது’’ என்றார்.

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை பாராட்டிய அகிலேஷ் மேலும் கூறுகையில், ‘‘மின்னணு வாக்குப்பதிவு எந்திர பயன்பாடு காரணமாக போபத்தில் இருக்கும் வாக்காளர்கள் பலர் வெளியில் வருவதில்லை என்பதை தேர்தல் ஆணையம் உணர வேண்டும்’’என்றார்.