சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய தன் காரணமாக, இந்த வழக்கில் 3வது நீதிபதியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதி நிஷா பானு,   நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று வழங்கப்பட்டது.

தீர்ப்பில் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த  ஆட்கொணர்வு மனு ஏற்கக் கூடியது தான். செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதமானது. எனவே உடனடியாக அவரை விடுவிக்கலாம் என்று நீதிபதி நிஷா பானு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் மற்றொரு நீதிபதியான நீதிபதி பரத் சக்ரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.  அதே சமயம் மருத்துவர்கள் கூறும் வரை செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம் என்றும், மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவலாக கருத முடியாது என்ற  உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருப்பதால் அடுத்ததாக தலைமை நீதிபதி அமர்விற்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு வழங்கவுள்ளனர். இந்த அமர்வில் இரண்டு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் அதுவே ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…