சென்னை: மாநில தலைநகர் சென்னை விரிவாக்கம் செய்யப்பட்டு, அதனுடன் பல பகுதிகள் இணைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகள் முழுமையான வசதிகள் பெறாமல், வளர்ச்சி அடையாமல் உள்ளன. இதை மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளுமா என சமூக ஆர்வலர்களும், குடியிருப்போர் சங்கத்தினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1,189 சதுர கிமீ. ல் இருந்து 5,904 சதுர கிமீ பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.  -இந்தியாவின் 3-வது பெரு நகரமாகிறது சென்னை கடந்த மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டு உள்ளது. ஆனால்,  சென்னையுடன் இணைக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இன்னும் வளர்ச்சி அடையாமலேயே உள்ளன. சென்னையின் நகர்புற பகுதிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.  ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ஆர்வம் காட்டுவது இல்லை என்றே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னையுடன் போரூர், ராமாபுரம், மணப்பாக்கம் மற்றும் முகிலிவாக்கம் போன்ற பகுதிகள் சேர்க்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும், அவை இன்னும் சாலைகளோ குடிமை வசதிகளோ இல்லாத வளர்ச்சியடையாத நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.பல தெருக்கள் நீண்ட காலமாக மறுசீரமைக்கப்படவில்லை, மேலும் நீங்கள் மண் சாலைகளை மட்டுமே பார்க்க முடியும் & பிடுமன் சாலைகள் இல்லை. முக்கிய பகுதிகளுடன் ஒப்பிடும்போது, விரிவாக்கம் செய்யப்படும்போது, சேர்க்கப்பட்ட பகுதிகள் சென்னை மாநகராட்சியிலிருந்து இரண்டாம் வகுப்பு பலனைப் பெறுவதாக பல குடியிருப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேவேளையில், சென்னையின் நகர்ப்பகுதியான, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் அல்லது அடையாறு போன்ற முக்கிய நகரப் பகுதிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர், ஆனால், எங்களது பகுதிகளை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கண்டுகொள்வது இல்லை  என்று சமூ ஆர்வலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

ராமாபுரத்தில் உள்ள கலசாத்தம்மன் கோவில் தெரு, மணப்பாக்கத்தில் உள்ள பெல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதிகளே இல்லை நிலையே இன்றுவரை தொடர்கிறது. சாதாரண மழைகளுக்கே அந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின் றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களின் உடைகளில் சேறும், சகதியும் தெறித்து அவதிப்படுகின்றனர். இதனால், இந்த ஆண்டு  வடகிழக்கு பருவமழை (அக்டோபர்) தொடங்கும் முன் சாலைகளை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதுபோல,  போரூர்-குன்றத்தூர் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து வாகனங்கள் செல்லவே முடியாத நிலை உள்ளது. இந்த பகுதிக்கு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கே பெரும் சிரமப்பட வேண்டியது உள்ளது.  மேலும்,  பெரும்பாலான உட்புறச் சாலைகள் சீரமைக்கப்படாமலே இருந்து வருகிறது, அவைகள் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என அந்த பகுதி சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து நகர்ப்புற சாலை வடிவமைப்பு நிபுணர் மார்க் செல்வராஜ் , இந்த சாலைகள் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் இருந்த போது போதிய நிதி விடுவிக்கப்படாமல்  சரி செய்யப்படாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது சென்னை மாநகராட்சி, சாலைகள் பராமரிப்புக்கு என கோடி கணக்கான பணத்தை ஒதுக்கி உள்ளது. அதன்மூலம், முதல்கட்டமாக இந்த பகுதியை உள்கட்டமைப்பு செய்து, சாலைகள் போடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும்,  சாலைகள் போடுவதற்கு முன்பாகவே, குடிமை அமைப்பு அதிகாரிகள் மெட்ரோவாட்டர், சாக்கடை போன்ற பணிகள் முடிக்கப்பெற்று அதன்பிறகே சாலை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

12 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் இருந்து வரும் புறநகர் பகுதிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு,  தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவில் நேரில் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.