மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவ கவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேவ கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா-வுக்கு கொரோனா இருப்பது உறுதியானது, அவரது மனைவிக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது.

இதனை அடுத்து மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேவ கவுடாவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “88 வயதாகும் தேவ கவுடாவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாகவும், அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.