தனுஷ் ரசிகர்களிடம் ஜி.வி.பிரகாஷ் மோதல்!

Must read

ஜி.வி.பிரகாஷ் பதிவிட்ட டுவிட்..
ஜி.வி.பிரகாஷ் பதிவிட்ட டுவிட்..

நடிகர் ஜி.வி.பிரகாஷ் சில காலமாகவே தனது அனைத்து கருத்துக்களையும் தனது சமூக வலைதளமான டுவிட்டரில் தெரிவித்து வருகின்றார், இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்று சில பத்திரிக்கை நிறுவனங்களையும் வெளுத்து வாங்கினார். அப்படிபட்ட இவர் தனுஷின் ரசிகர்களுடன் டுவிட்டரில் சண்டையிட்டுள்ளார்.
இரவு முழுவதும் தனுஷ் ரசிகர்கள் இவரை அசிங்க அசிங்கமாக திட்ட பதிலுக்கு இவரும் சில வார்த்தைகளை பயன்படுத்த கொஞ்ச நேரத்துக்கு டுவிட்டர் அடல்ட் டுவிட்டராக மாறிப்போனது அந்த அளவுக்கு கீழ் தரமாக சண்டையிட்டுள்ளனர்.
வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைக்க, தனுஷ் மறுத்து விட்டார். ஏற்கெனவே இருவரிடம் இருந்த விலகல் இதனால் அதிகமானது.
டுவிட்டரில் ஒரு ரசிகர் “நீ தனுஷை பிரிந்தபிறகுதான் உனக்கு நேரம் சரியில்லை” என்றார் இதை கண்ட ஜி.வி. கடுப்பாகி உடனடியாக ஒரு டுவிட் போட்டார் அதில் “டேய் லூசு தனுசை பிரிந்தபிறகுதான் ஹீரோவானேன்; சம்பளமும் இரண்டு மடங்காக உயர்ந்துடிச்சு” என்றார் இதை பார்த்த சில சினிமா பிரபலங்கள் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு அறிவுரை கூறியுள்ளனர் அதனால் தனுஷை பற்றி சொன்ன டுவிட்டை மட்டும் டெலீட் செய்துவிட்டார் ஜி.வி.
இதற்கு முன் அஜித் ரசிகர்களை ஆமை என்று சொல்லி ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் அவருக்கு டுவிட்டரில் செம்ம ஆப்பு கொடுத்தனர். இப்போது தனுஷ் ரசிகர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

More articles

Latest article