கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் D43. இப்படத்திற்கு ஜிவிபிரகாஷ் இசையமைக்கிறார். பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் D43 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் பாடல் ஆல்பம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் D43 ஆல்பம் நன்றாக வந்துகொண்டிருக்கிறது என பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதும் பாடல்கள் குறித்த அப்டேட்டை பதிவு செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.