சீமான் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் – விஜய் ஆண்டனி

பிரபல திரைப்பட இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சீமான், இதுவரை ஐந்து படங்களை இயக்கி இருக்கிறார்.

2013ம் ஆண்டு, மாதவன் நடித்த `வாழ்த்துக்கள்’ திரைப்படத்தை இயக்கினார். அதே வருடம் `நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ’ படத்திலும் பிறகு 2010ம் ஆண்டு “வாழ்த்துகள்” திரைப்படத்திலும் நடித்தார்.

அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார்.

இந்த நிலையில், சீமான் மீண்டும் திரைத்துறை பக்கம் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே கடந்த 2010ம் ஆண்டு விஜய்யை வைத்து பவலன் என்ற பெயரில் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த முயற்சி இடையிலேயே நின்றுவிட்டது.

அந்த படத்தின் கதையை மீண்டும் எடுக்க சீமான் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும், ஜி.வி.பிரகாஷூம் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம், அரசியலை மையமாக வைத்து மற்றொரு படம் ஒன்றையும் சீமான் இயக்க உள்ளதாகவும், அதற்கு `கோபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது..


English Summary
gv prakash and vijay anthony act in seeman direction