அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பாடகி ஒருவர் மீது ரசிகர்கள் ரூ.40 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வீசுவது போன்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற ஒரு திருமண நிகழ்ச்சி பாடகி ஒருவர் மீது பணத்தை வீசும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், பாடகி பாடிக்கொண்டு இருக்கிறார். அவரை சுற்றி நின்று மக்கள், அவர் மீது சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான பணத்தை வீசுகின்றனர்.
இந்த வீடியோ காட்சிக்கு இணையத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பணத்தட்டுபாடு உள்ள சூழ்நிலையில் இவ்வளவு ரூபாய் எப்படி கிடைத்தது என்பது புரியாத புதிராக உள்ளது. ரொக்கமாக பணம் எடுக்க கட்டுபாடு மற்றும் விதிமுறைகள் உள்ள நிலையில் இவர்களுக்கு இவ்வளவு ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது,.