டெல்லி:
வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்பி வந்தால் கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
செக் மோசடி செய்து வருபவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த திருத்தம் மூலம் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்தால் 2 ஆண்டுகள் சிறை அல்லது
இரு மடங்கு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தகவல வெளியாகியுள்ளது.
 

ரொக்கமில்லா பரிவர்த்தணைக்கு செக் மூலமான பரிமாற்றத்தை ஊக்குவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறை வழங்கியுள்ளது
செக் பரிவர்த்தனைகளில் பெருமளவு மோசடி நடைபெறுகிறது. அதை உரிய முறையில் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது என மத்திய அரசுக்கு புகார் வந்தது. மேலும் காசோலை மோசடியால் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களில் வழக்கு இதுதொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு ஏதுவாக பணமின்றி திரும்புவதால் வணிகர்கள் தொழிலை மேற்கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டவர அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மோசடி வழக்குகளில் சிக்குவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட செக் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 38 ஆயிரம் வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் உள்ளது.
இதில் பெரும்பாலான வழக்குகள் 5 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தான் அதிக அளவில் செக் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது கூடுதல் தகவல்.