சென்னை; மோடி பெயர் தொடர்பாக ராகுல் விமர்சித்து வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த்து உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து ராகுலுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. 2019ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பிரதமர் மோடியை சுட்டிக்காட்டி பேசி வந்தார்.  இது சலசலப்பை ஏற்படுத்தியது. குஜராத் உள்பட சில மாநிலங்களில் மோடி என்ற பெயரில் பல குடும்பங்கள் உள்ளதால், அவர்கள் தங்களை ராகுல் இழிவுபடுத்திய தாக கூறி வழக்கு தொடர்ந்தனர். ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில்விசாரணை முடிவடைந்து, 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத்  மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் உடனே ஜாமினும் வழங்கி உள்ளது.

ராகுல் காந்தி 30 நாட்களுக்குள்  மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமின் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்டிப எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளதாக அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெரிவித்து உள்ளார்.