காந்திநகர்:  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்:. அவரது உடல் இன்று காலையே தகனம் செய்யப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்த பிரதமர் மோடி, தனது வீட்டில் இருந்து காந்தி நகரில் உள்ள தகன மேடைக்கு தாயாரின் உடலை சுமந்து வந்தார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 100வயதான ஹீராபென் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பென்று வந்தார். அவரை பிரதமர் நேற்று முன்தினம் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.  அவர் மருத்துவமனையில் இருந்து உடல்நலம் தேறி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை   3.39 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடல் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரதமர் மோடி உள்பட அவரது உறவினர்கள் ஹீராபென் உடலுக்கு மரியாதை  செய்தனர். இதையடுத்து, அவரது உடல் தகனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றன.

தொடர்ந்து அவரது உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது உடலை காந்திநகரில் உள்ள தகனமேடைக்கு சுமந்து சென்றார்.

தனது   தனது தயார் இறந்தது  குறித்து டிவிட்டரில் உருக்கமான பதிவிட்டுள்ள  பிரதமர் மோடி, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்துள்ளது .என் அம்மாவிடம் , ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் சின்னம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உணர்ந்தேன்”

“அவரது 100 வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார், இது எப்போதும் நினைவில் உள்ளது, இது புத்திசாலித்தனத் துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள்,” என்று அறிவுரை கூறினார்எ ன பிரதமர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தயாரார் மறைவுக்க உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சியினர், மாநில முதல்வர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Photo and Video Credit: ANI