சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை..

’’குஜராத் மாநில போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்’’ என அங்குள்ள சமூக வலைத்தளங்களில் ஒரு பிரச்சார இயக்கமே நடந்து வருகிறது.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில், ஊதிய உயர்வு கேட்கும்  போலீசுக்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து குஜராத் மாநில அரசு, போலீசாருக்கு திடீர் என ’’ புதிய நடத்தை விதிமுறைகளை’’ நேற்று அறிவித்துள்ளது.

 மாநில காவல்துறை டி.ஜி.பி. சிவானந்த ஷா இந்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

’’காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாக இனிமேல் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது’’ என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போலீசார்  பிரசுரங்கள் அச்சடித்து வெளியிடக்கூடாது என (இப்போது) சட்டம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்க அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.

எனினும் உளவுத்துறை போலீசாருக்கு இந்த நடத்தை விதிகள் பொருந்தாது .

-பா.பாரதி.