குஜராத் : அகிலேஷ் யாதவ் படத்துடன் பள்ளிப் பை

Must read

சோட்டா உதேபூர், குஜராத்

கிலேஷ் யாதவ் படம் அச்சடிக்கப் பட்ட பள்ளிப் புத்தகப் பைகள் சோட்டா உதேபூர் என்னும் குஜராத் நகரில் விநியோகிக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

சோட்டா உதேபூரில் பள்ளி புகும் விழா (ஷாலா ப்ரெவேஷ் உத்சவ்) நடைபெற்றது.

இந்த விஷாவில் மாணவர்களுக்கு சுமார் 12000 பைகள் வழங்கப்பட்டது.

அதில் நகரின் பஞ்சாயத்து சின்னம் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது.

அதை பிரித்ததில் ஒரு பேரதிசயம் மாணவர்களுக்கு காத்திருந்தது.

அந்த ஸ்டிக்கரின் கீழே மற்றொரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

அதில் அகிலேஷ் யாதவ் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது.

சமாஜ்வாதி கட்சியின் சார்பாக அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டது.

இந்தப் பைகள் உ. பி. அரசிடம் இருந்து பரிசாகப் பெறப்பட்டதாக தெரிய வந்தது.

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தனது ஆட்சிக்காலத்தில் பள்ளிப் பைகள், லாப்டாப் மற்றும் பல கல்வி உபகரணங்களை மக்களுக்கு வழங்கி வந்தார்.

இதில் ஒரு பகுதியாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் புத்தகப் பைகள் வாங்கப்பட்டது.

அதில் இது போல படம் ஒட்டப்பட்டிருந்தது.

தேர்தல் அறிவிப்பினால் இந்தப் பைகள் வழங்கப்படவில்லை.

தேர்தலில் அகிலேஷ் தோல்வியுற்று யோகி ஆட்சிக்கு வந்தார்.

இந்தப் பைகளில் அகிலேஷ் யாதவ் படம் இருந்தாலும், அதை வீணாக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்த விரும்பாமல் மாணவர்களுக்கு அளிக்க உத்தரவிட்டார்.

மிகுந்த பைகள் அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

அப்படிக் கிடைத்த பைகளில் சோட்டா உதேபூர் நகராட்சி நிர்வாகிகள் தங்களின் லோகோ வை ஒட்டி அளித்து விட்டனர்

அரசுப்பணத்தை தனது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காக வீணடிக்க விரும்பாத யோகியின் செயலை உ.பி. அதிகாரிகள் பாராட்டுகின்றனர்

More articles

Latest article