டில்லி

ஜி எஸ் டி என் (ஜி எஸ் டி நெட்வர்க்) சேர்மன் நவின்குமார் ஒரு பேட்டியில்  ஜிஎஸ்டி இணைய தளத்தின் மென் பொருளை பரிசோதிக்கக்கூட நேரமின்றி தன் அலுவலகம் பிசியாக உள்ளதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜி எஸ் டி என் சேர்மன் உடன் செய்தியாளர்கள் ஒரு நேர்க்காணல் நிகழ்த்தினர்.  அந்த நேர்க்காணலின் முக்கிய விவரம் பின் வருமாறு

கே : ஜி எஸ் டி அமுலுக்கு வர இன்னும் ஒரு வாரமே உள்ளது.  உங்கள் மனநிலை எப்படி உள்ளது.  ஏதும் பயம் உள்ளதா?

ப : எங்களுக்கு எதைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லை.  சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 28 மணி நேரம் பணி புரிகிறோம் (சிரிப்பு)

கே : தொழிற்சாலை, மற்றும் வியாபாரிகளிடமிருந்து உங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் குவிகிறதா?

ப ; தொழிற்சாலைகள் பொதுவாக அரசை நேரடியாக அணுகி விடும்.   ஆனால் எங்களுக்கும் ட்வீட்டுகளும் மெசேஜ்களும் குவிந்த வண்ணமே உள்ளது.   பதிவு ஆரம்பத்தில் பல ஐடிகள் செயல்பாடு இல்லாததைக் கண்டறிந்து அவைகளை நீக்கினோம்.   பின் அதற்காக பலரும் எங்களிடம் திரும்ப சேர்க்க முறையிட்டனர்.   அனைத்து கணக்குகளையும் ஆய்ந்து பிறகு முடிவு எடுக்கப்பட்டது.

கே: தங்களின் இந்த ஜிஎஸ்டி சிஸ்டம் பற்றி உங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதா?  அதன் மென்பொருளை பரிசோதித்து முடித்து விட்டீர்களா?

ப : இது ஒரு நிலையான அமைப்பு.  மென் பொருளை முதற்கட்ட சோதனைக்கு உட்படுத்தி,  அதிலுள்ள குற்றங்களை களைந்து இப்போது முழுமையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.   இனி இதில் தவறு வர வாய்ப்பே இல்லை.   அதே நேரத்தில் எங்களுக்கு முழுமையாக பரிசோதிக்க நேரம் இல்லை.   நாங்கள் பரிசோதித்த வரையில் இது நம்பிக்கைக்குரிய மென்பொருள்தான்

கே : ஜுலை 1 என்பது மிகவும் குறுகிய காலமாக உள்ளதே, இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப : ஆம்.  இது மிகவும் குறுகிய காலம்தான்.   அதற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க ஆவன செய்து வருகிறோம்.  டிசம்பர் மாதம்தான் ஜிஎஸ் டி சட்டம் ஒரு ஃபைனல் ஷேப்புக்கு வந்தது.   அதன்பின் எல்லாவற்றையும்  ஆரம்பிக்க வேண்டியிருந்தது.   அதற்குப் பிறகும் சட்டத்திலும் பல மாறுதல்கள் வந்தன.  அனைத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம்.   நல்லவேளையாக அதிகம் திருத்தம் இல்லாததால் அனைத்தையும் குறித்த கெடுவுக்குள் முடிக்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறோம்.

கே : இறுதியாக எப்போது இது முடிவுக்கு வரும்?

ப : டிசம்பரில் உருவான சட்டத்தின் படி, அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.   ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப மென்பொருளில் மாற்றத்தை உண்டாக்கி வருகிறோம்.    மொத்தம் 3 முறை ரிவிஷன் செய்யப்பட்டுள்ளது,   அதில் முதல் ரிவிஷனை உள்ளடக்கியது ஜூன் 28ல் வெளிவரும்.  அது ஜூலை 15 முதல் அமுலுக்கு வரும்.  அதன்பின் மற்ற இரண்டு ரிவிஷனும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும்.

இவைகளே அந்த பேட்டியில் காணப்படும் முக்கிய பாயிண்டுகள்