புதுடெல்லி: 
டந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம்  தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்றும்,  இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட 23% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்துள்ளது நாட்டின் பொருளாதாரம் சிறப்பான பாதையில் உள்ளதைக் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.