டில்லி.

ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 70000 வரி அதிகாரிகள்  கருப்பு பட்டை அணிந்து, தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

மத்திய வருமானவரித்துறை, கலால் மற்றும் சுங்கத்துறையின் கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் ஜிஎஸ்டி குறித்து விவாதம் தேவை என வலியுறுத்தி, இன்று (ஜனவரி 30ந்தேதி) இந்தியா முழுவ தும் உள்ள CBEC 70,000 அதிகாரிகள் கறுப்பு பட்டைகளை அணிந்து வேலை செய்து வருகிறார்கள்.

கடந்த 16ந்தேதி நடைபெற்ற  நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த சில சமீபத்திய முடிவுகளை எதிர்த்து இந்த கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு 16 மாநிலங்கள் ஒப்புதல் கொடுத்துள்ளன.

ஆனால், இதன் காரணமாக தொழில், வர்த்தகம் மற்றும் வணிக வருவாய் திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு குழப்பம் ஏற்பட வழிவகுக்கும் என ஆட்சேபனை தெரிவித்து,

கலால் மத்திய வாரியம் மற்றும் சுங்க (CBEC) கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் இந்த கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்கு செல்லும் என்று அவர்கள்  நம்பிகை தெரிவித்து உள்ளனர்.