சென்னை கப்பல் மோதல்: ஆனால், பெரும் விபத்து தவிர்ப்பு!

Must read

சென்னை,

ண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கப்பலில் இருந்த ஆயில் கசிந்து கடற்பகுதி மாசு அடைந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள மீன்கள், ஆமைகள் மற்றும் உடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பதாகவும் கூறப்படுகிறது.

இருந்தாலும் கப்பல் கேப்டன்களின் உடனடி முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும் சரக்குகள் அனைத்தும் சென்னை எண்ணூர் துறைமுகம் மூலம் இறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணூர் துறைமுகம் எப்போதும் பரபரப்பாக இயங்கும்..

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் எண்ணெய் ஏச்எப்ஓ எனப்படும் கனரக ஆயில்) ஏற்றி வந்த கப்பலுடன், துறைமுகத்தில் சரக்கு இறக்கிவிட்டு சென்ற மற்றொரு எல்பிஜி சரக்கு கப்பலுடன்  லேசாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக உடனடியாக இரு கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து கப்பலில் இருந்து கனரக  ஆயில் கசிவது உடனடியாக தடுக்கப்பட்டது. இருந்தாலும் சுமார் 1 டன் அளவிலான ஆயில் கடலில் கலந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் வசித்து வந்த ஆமைகள், மீன்கள் செத்து மிதப்பதாக தகவல்கள் கூறுகிறது.

இதுகுறித்து எண்ணூர் துறைமுக சேர்மன் எம்ஏ.பாஸ்கரசார் கூறியதாவது,

இரு கப்பல்களுக்கிடையேயான உரசல் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி) கப்பல் எம்டி வெ மேப்பிள் மற்றும் எண்ணெய் டேங்கர் கப்பலரான எம்டி டான் காஞ்சிபுரம்  ஆகிய இரு கப்பல்களுக்கிடையே மோதல் நடைபெற்றுள்ளது.

சரக்கு கப்பலில் வந்த கனரக ஆயில் டேங்க் உடைந்தது.  இதிலிருந்து சுமார் 1 டன் ஆயில் கடலில் கலந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுசூழல் மாசடைந்துள்ளது.

இதை அகற்ற இந்திய கடலோர காவல்படை இரண்டு நிறுவனங்களை பணியமர்த்தி உள்ளது. அவர்கள் நாளைமுதல் பணியை தொடங்குகிறார்கள்.

மேலும் இந்த விபத்து காரணமாக யாருக்கும் எந்தவித காயமோ, சேதமோ ஏற்படவில்லை.

இதுகுறித்து, கடலோர காவல்படை இரண்டு கப்பல் கேப்டன்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும் இதுகுறித்து கப்பல் நிபுணர் கிரிஷ் சேகல், (திரவ இயற்கை எரிவாயு கலன் தொழில்நுட்ப ஆலோசகர்) கூறியதாவது,

இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறு உரசலோடு நின்றுவிட்டது. இல்லையேல் பெரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றார்.

இந்த விபத்து மனித பிழை காரணமாகவே நடைபெற்றிருக்கிறது. மேலும், எல்பிஜி டேங்கர் கப்பல் காலியாக இருந்ததால் அசம்பாவிதம் நிகழாமல் இருந்தது. இல்லையேல் அது வெடித்து சிதறி பெரிய விபத்து ஏற்படுத்தியிருக்கும் என்றும் கூறினார்.

 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article