சென்னை:

டிஎன்பிஎஸ்சி நடத்தும் 6491 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்க 10லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு பணிகளுக்கு தேவையான நபர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் குரூப்-4 தேர்வு நடைபெறாத நிலையில், தற்போது, 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப்- 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 1ந்தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வு மூலம்,  தமிழ்நாடு அமைச்சுகப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சப்பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணிகள் என குரூப்-4 நேரடியாக நடத்தப்பட  இருப்ப தாக டிஎன்பிஎஸ்சி  அறிவித்து உள்ளது.  காலிப்பணியிட விவரங்கள் தோராயமானது என்றும் தெரிவித்து உள்ளது.

விண்ணப்பம் செய்ய கடைசி நாள் ஜூலை 14ந்தேதி. இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை 10லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.

பணியிட விவரங்கள்:

கிராம நிர்வாகம்  397 காலி பணியிடங்கள்

இளநிலை உதவியாளர்  2688 காலி பணியிடங்கள்,

இளநிலை உதவியாளர் (பிணையம்) 104 காலி பணியிடங்கள்,

வரி தண்டலர்- நிலை -139 காலி பணியிடங்கள்,

நில அளவையாளர் 509 காலி பணியிடங்கள்,

வரைவாளர் 74 காலி பணியிடங்கள்

தட்டச்சர் 1901 பணியிடங்கள்

சுருக்கெத்து தட்டச்சர்  784 பணியிடங்கள்

மொத்தம் 6491 பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

இந்த பணிகளுக்காக தேர்வு செய்யப்படுபவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.19500 லிருந்து ரூ.62000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20800 லிருந்து ரூ.65500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.