தமிழ்நாடு : 55000 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு 

Must read

சென்னை

மிழ்நாடு ஃபைபர் நெட் கார்பரேஷன் மூலம் தமிழகம் முழுவதும் 55000 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் பொருத்த உள்ளதாக அமைச்சர் மணிகண்டன்தெரிவித்துள்ளர்.

தமிழக அரசு ஒவ்வொரு கிராமத்திலும் இணைய சேவையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.   இதன்படி அம்மா ஈ கிராமம் என்னும் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் திருநெல்வேலி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், கரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆறு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.   இந்த கிராமங்களுக்கு முதல் கட்டமாக இணைய வசதி வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மற்றொரு அங்கமாக தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்பரேஷன் தமிழ்கம் முழுவதும் 55000 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் பொருத்த உள்ளது  இந்த கேபிள் மூலம் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் ஆகிய நிறுவனங்கள் இணைய சேவையை வழங்க உள்ளது.   இந்த திட்டத்தின் கிழ் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் 12524 கிராமங்கள், 528 நகர பஞ்சாயத்துக்கள், 121 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அமைக்கப்பட உள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் வீட்டில் இருந்தே கிராம மக்கள் தங்கள் அரசு அலுவலக பணிகளை முடிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதை சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் நேற்று அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இலவச இணைய வசதி கல்வியில் பின் தங்கி உள்ள 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இதற்காக ரூ.9.06 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  அத்துடன் தொலைக்காட்சி மூலம் பாடம் பயிற்றுவிக்க 50 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 1.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article