புதுடெல்லி: நரேந்திர மோடியின் ஆட்சியில், இந்திய அரசின் மொத்த கடன்தொகை 49% உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

அரசின் கடன்கள் குறித்து வெளியிடப்படும் நிலைவிபர அறிக்கையின் 8வது பதிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தின்படி, மொத்த கடன்தொகையின் அளவு ரூ.82 லட்சம் கோடி. அதேசமயம், கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் வரையான அரசின் கடன்தொகை ரூ.54,90,763 லட்சம் கோடி.

கடந்த 4.5 ஆண்டுகால வித்தியாசத்தில், பொதுக் கடன் தொகையானது 51.7% அதிகரித்து, ரூ.48 லட்சம் கோடியிலிருந்து, ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் உள்நாட்டு கடன்தொகை 54% அதிகரித்து, ரூ.68 லட்சம் கோடியாக உள்ளது.

– மதுரை மாயாண்டி