சென்னை:
மிழக ஆளுநர் ரவி திடீரென தமிழ்நாட்டை புகழ்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உடனான கலந்துரையாடலின் போது, ஆளுநர் ரவி பேசுகையில், தமிழ்நாடு என்பதை தமிழர்கள் பெருமையாக கருதுகின்றனர். இங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ் கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன் என்றும் கூறினார்.