டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைகர் டெல்லியில்  மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வந்த புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் முடிவடைந்து உள்ளதாக, கட்டுமான நிறுவனமான டாடா தெரிவித்து உள்ளது. இதையடுத்து, புதிய கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசாங்கம் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக, பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர்  மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய விஸ்டா திட்டத்தின்படி, புதிய நாடாளுமன்ற கட்டித்தில், எம்பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம் பெறுகின்றன.  மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவு கூடங்கள் உள்பட பல்வேறு வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், மத்திய விஸ்டா தினத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற கட்டடிடப்பணிகள் முடிவடைந்து விட்டதாக, டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினாயக் பை தெரிவித்துள்ளார்.  ‘‘நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிட பணி முடிந்து விட்டது. தற்போது உள் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, ஒரு நூலகம், பல குழு அறைகள், உணவருந்தும் பகுதிகள் மற்றும் போதுமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை இருக்கும். கட்டிட கலைஞர்களால் நன்றாக சிந்தித்து இப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

உயர் பணவீக்க அழுத்தத்தின் சவாலை டாடா புராஜெக்ட்ஸ் எவ்வாறு சமாளிக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த திரு. பாய், பெரும்பாலான தொழில்கள் பொருட்களை அதிகம் நம்பியிருப்பதால் அவை எதிர்கொள்ளும் சவால்கள் நிச்சயமாக உள்ளன என்றார். எனவே, நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று புத்திசாலித்தனமாக வாங்குவது. எனவே, நாங்கள் செய்யும் பல மொத்தப் பொருள் வாங்குதல்களில் நீண்ட கால ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளோம்” என்று பாய் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் மோதலால் கட்டுமானத்திற்கான உள்ளீடு செலவு உயர்ந்துள்ளதா என்று கேட்டதற்கு, ஸ்டீல் விலை உயர்ந்துள்ளதாகவும், ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உள்ளிட்ட சில சிறப்பு பொருட்கள் தாமதமாகி வருவதாகவும் கூறினார். “எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன, எங்கள் திட்ட தளத்தில் எங்களுக்கு நிறைய இயக்கத் தேவைகள் உள்ளன. நாங்கள் நிறைய டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துகிறோம். “எனவே, உள்ளீடு செலவுகள் ஓரளவு உயர்ந்துள்ளன,” என்று அவர் கூறினார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் அடுத்த குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.