டில்லி:

டில்லியில் மாசு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாசு உச்சக்கட்டத்தை எட்டியதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை உருவானது. மாசு பாதிப்பில் இருந்து தப்பிக்க தனி நபர்கள் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். அலுவலகங்கள், வீடுகளுக்கு காற்று சுத்திகரிப்பான்கள் பொறுத்தப்படுகிறது.

இந்த வகையில் 2014 முதல் 2017ம் ஆண்டு வரை பிரதமர் மோடி அலுவலகங்களுக்கு 140 காற்று சுத்திகரிப்பான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர அரசு துறைகளுக்கு 6 சுத்திகரிப்பான் வாங்கப்பட்டுள்ளது.

காற்று சுத்திகரிப்பான் வாங்குவதற்கு மட்டும் அரசு ரூ. 36 லட்சம் செலவு செய்துள்ளது. பிரதமர் அலுவலகம் தவிர நிதிஆயோக், சுகாதாரம், வேளாண், சுற்றுலா, உள்துறைல வெளியுறவு துறை ஆகிய அமை ச்சகங்களுக்கும் சுத்திகரிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2016ம் ஆண்டு நவம்பரில் அதிகளவிலான புகையை டில்லி எதிர்கொண்டது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்தது என்று அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் தெரிவித்துள்ளது.

1952ம் ஆண்டு லண்டனில் இதுபோன்று ஏற்பட்ட புகை மண்டலத்தால் 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.