சென்னை: திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும் என முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது. ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 15ந்தேதி திருநங்கையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி,   வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநங்கையர் திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பான தமிழக முதல்வர் ஸ்டாலின்  படம் ஒன்றை இணைத்து பதிவிட்டுள்ள டிவிட்டில்,  “இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு திருநங்கையர்நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருநங்கையர் கண்ணியம் காத்த மறைந்த முதல்வர் கருணாநிதி காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் தமிழக அரசு, திருநங்கையர் – திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.