ஜெனிவா:
லகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில் கிட்டத்தட்ட 3.3 மில்லியன் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நான்கு பிராந்தியங்களில் புதிய நிகழ்வுகளில் “குறிப்பிடத்தக்க” அதிகரிப்பு காணப்பட்டது, அதாவது தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக், ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகள் முறையே 49 சதவீதம், 29 சதவீதம், 13 சதவீதம் மற்றும் 8 சதவீதம் அதிகரித்துள்ளன.

தென் கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக், ஐரோப்பா அம்ற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகிய 4 பிராந்தியங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இங்கு முறையே 49 சதவீதம், 29 சதவீதம், 13 சதவீதம் மற்றும் 8 சதவீத அளவுக்கு கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 சதவிகிதமாக இருந்து வருகிறது.

சமீபத்திய ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (சிஎஸ்எஸ்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முறையே 124,688,146 மற்றும் 2,742,974 என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகள் முறையே 30,009,386 மற்றும் 545,237 என்றும் இது அமெரிக்காவில் பதிவான அளவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து
பிரேசில் 12,220,011 கொரோனா பாதிப்பு மற்றும் 300,685 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.