கொழுப்பு: 
மார்ச் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்க  இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா  தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாகக் கடந்த அக்டோபர் மாதம் இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.  இந்நிலையில், தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மார்ச் 29 அன்று மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து  இலங்கை கல்வித்துறை அமைச்சர் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கையில்,  சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, அனைத்து தரங்களுக்கான பள்ளிகளும் மார்ச் 29 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று  அதிகரிப்பு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக மேற்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,  தேவையான அனைத்து சுகாதார நெறிமுறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும்  மீண்டும் திறக்க உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று தற்போது  நாங்கள் நம்புகிறோம். இது தொடர்பான சுகாதார பரிந்துரைகளைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29 முதல் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை முறையே 90,765 மற்றும் 552 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.