இந்துத்துவத்துக்கு எதிரான ஹரா?

Must read

ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா
எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ஹரா படத்தில், (மைக்) மோகன் – குஷ்பு ஜோடியாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் முக்கிய வேடங்களில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஜெயக்குமார், ரயில் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மனோ மற்றும் பிரஹத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய லியாண்டர் லீ இசை பணியை மேற்கொள்கிறார். குணா எடிட்டிங் செய்கிறார்.
இந்திய சட்டம் குறித்து பள்ளிகளிலேயே பாடங்கள் வைக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில், பால்தாக்கரே வேடத்தில் இருக்கும் சாருஹாசன், ‘ராமை வரச்சொல்’ என்று ஒருவரிடம் உத்ரவிடுகிறார்.
அப்போது மோகன், ‘நான் ராம் இல்லடா.. தாவூத் இப்ராஹிம்!’ என்கிறார் மோன்.
இறுதியில் காவி கலர் கொடி பறக்க, இயக்குநர் அதில் விஜய்ஸ்ரீ பெயர் வருகிறது
ஆக இந்த படம் இந்து – முஸ்லீம் மதம் பற்றி சில விஷயங்களை சொல்ல வருகிறது என்பதை யூகிக்க முடிகிறது.
ஆகவே படத்த்தில் சர்ச்சைகளுக்கு குறைவிருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
டீசர்:

More articles

Latest article