பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எனது மகளின் திருமணம் எனது ஆசியுடன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று சுனில் ஷெட்டி கூறியுள்ளார்.

மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுனில் ஷெட்டி தீவிரமாக மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் பிரபலங்கள் மட்டுமன்றி இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.எல். ராகுலுடன் எந்த வித ஒளிவுமறைவின்றி அதியா ஷெட்டி டேட்டிங்கில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர்கள் இருவரும் பதிவிட்டு வரும் நிலையில், அவர்கள் திருமணம் குறித்து சுனில் ஷெட்டி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.