சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள்  இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக ஆட்சி பதவி ஏற்றதும், குமரி கடலில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பில் 72 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘அதன்படி,  பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது முக்கடலின் அழகைப் பார்த்து ரசிக்கவும், கடலின் சீற்றத்தால் பாதிப்பு ஏற்படாத வகையிலும் கடினத் தன்மைக்கொண்ட கண்ணாடி இழை அமைக்க டெண்டர் விடப்பட்டதுடன், . ஓராண்டுக்குள் பாலம் பணிகள் நிறைவடைந்து முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.

இதையடுத்து கண்ணாடி பாலம் அமைக்கும் பணியை சென்னையைச் சேர்ந்த பிரபல தனியர் கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இணைப்பு பாலத்திற்கான முதற்கட்ட பணியாக இன்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை எடுத்து சென்னையில் உள்ள ஐஐடிக்கு அனுப்பி பாறைகளின் உறுதி தன்மையை சோதனை செய்யும் பணியானது இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஐடி ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து, விறுவிறுவென பணிகள் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு திருவள்ளுவர் தினத்துக்குள் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.