சென்னை

ஜெர்மன் அதிபர் ஃப்ரான்க் வால்டர் ஸ்டென்மெய்ர் இன்று தனது 4 நாள் சுற்றுப்பயணத்தின் அங்கமாக சென்னை வருகிறார்.

இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக ஜேர்மன் அதிபர் ஃப்ரான்க் வால்டர் ஸ்டென்மெய்ர் வந்துள்ளார்.   இவர் வாரணாசியில் கங்கை நதியில் படகு சவாரி செய்தார்.   அப்போது வாரணாசியில் நடந்த கங்கை ஆரத்தியை கண்டு களித்தார்.   அத்துடன் டில்லி ஜும்மா மசுத்திக்கு சென்று  பார்வையிட்டார்.   அடுத்த கட்டமாக இன்று நண்பகல் அவர் சென்னை வர உள்ளார்.

சென்னை வரும் ஜெர்மன் அதிபர்  சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள டெய்ம்லர் கார் நிறுவனம் செல்கிறார்.   அங்கு நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்.   அதன் பின்னர் ஐஐடியின் ஆராய்ச்சிபூங்கா வரும் அவர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடலில் கலந்துக் கொள்கிறார்.  நாளை தொழிலதிபர்களை சந்திக்கவும்,  மாமல்லபுரம் செல்லவும் ஜெர்மன் அதிபர் திட்டமிட்டுள்ளார்.