சென்னை:  தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று  வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட், மத்தியஅரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என்று, அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். மேலும், வேளாண்துறையில் உள்ள  சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், உணவுப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்று கூறினார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்…

தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி,  கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் அதற்கென தனி அமைப்பு ஒன்று வழங்கப்படும்.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும்.

ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய 2 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

மீன்பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை,வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கு என ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். இதற்கென ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தோட்டக்கலை கல்லூரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை கல்லூரி ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டு கட்டுமான பணி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீரை சாகுபடி

அனைத்து மாவட்டங்களிலும் 1000 ஹெக்டேர் பரப்பில் கீரை சாகுபாடி உற்பத்தி செய்ய ரூ. 95 கோடி நிதி ஒதுக்கீடு

6:09 (IST) 14 Aug 2021

பயிர் காப்பீடு திட்டம்

பயிர் காப்பீடு திட்டத்தில் 2வது தவணையாக ரூ. 1,248.98 கோடி விரைவில் வெளியிடப்படும்

6:00 (IST) 14 Aug 2021

அண்ணா பண்ணை மேம்பாடு – ரூ.21.80 கோடி நிதி

அண்ணா பண்ணை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.21.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 ஏக்கர் பரப்பளவில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே செயல்படும் அண்ணா பண்ணை, அண்ணா பன்முக வேளாண் செயல்விளக்க விதைப் பண்ணையாக மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5:57 (IST) 14 Aug 2021

20 ஆயிரம் ஹெக்டேரில் சொட்டுநீர் பாசன முறை

நீர் பற்றாக்குறையை போக்க நடப்பாண்டில் சொட்டுநீர் பாசன முறை 20 ஆயிரம் ஹெக்டேரில் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

5:52 (IST) 14 Aug 2021

உழவர் சந்தையை மேம்படுத்த ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு

50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5:50 (IST) 14 Aug 2021

எண்ணெய் வித்துக்கள் திட்டம் – ரூ.25.13 கோடி நிதி

எண்ணெய் வித்துக்கள் திட்டத்திற்கு ரூ.25.13கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

5:47 (IST) 14 Aug 2021

தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும்

டெல்டா தென்னை விவசாயிகளுக்காக தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும் எனவும் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டல மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார அளவில் விவசாயத்திற்கு தேவையான வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய செயலி, இணையதளம் ஆகியவற்றை உருவாக்கி அதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்க 185 டிராக்டர்கள், 185 ரோட்டரேட்டர்கள், 4 மருந்து ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழக பட்ஜெட்டில் மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் மொத்த மின்உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.