சென்னை: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ரூ.4 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்காக  மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் பரவி வருகிறது. சமீப காலமாக பரவி வரும் உருமாறிய டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் வைரஸ் போன்றவற்றை கண்டறியும் சோதனை ஆய்வுகம் தமிழ்நாட்டில் இல்லை. இதனால், பெங்களூரு உள்gட  வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகத்திலேயே கொரோனா மரபனு பகுப்பாய்வு நடத்தும் வகையில்  ஆய்வுகூடம் அமைக்க தமிழஅரசு திட்டமிட்டது.,

அதன்படி, நான்கு கோடி ரூபாய் செலவில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மரபணு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  பகுப்பாய்வுக் கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  புதிய ஆய்வகத்தில் பரிசோதனைகளை செய்ய ஐந்து பேர் கொண்ட வல்லுநர்கள் குழு பெங்களூருவில் பயிற்சி எடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.