Skip to content
  • Mon. Aug 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News தமிழ் நாடு

6 மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்! அமைச்சர் செந்தில் பாலாஜி

Sep 14, 2021

சென்னை: 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு மின்துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்பட  4.52 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு மின்சார வாரியம் விரைவில் கடிதம் அனுப்பும். கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் பதிவு செய்தவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முதல்கட்டமாக 2022மார்ச் மாதத்திற்குள், அதாவது அடுத்த 6 மாதத்திற்குள் விண்ணப்பித்துள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்த பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

மேலும்,  தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 16,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது 40% மின்சாரம் தனியாரிடம் இருந்து அரசு கொள்முதல் செய்கிறது. நிலக்கரி மாயம் தொடர்பான விசாரணை குழு இறுதி அறிக்கையின் ஆய்வில் உள்ளது. அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை முதலமைச்சரின் ஆலோசனைப்படி எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Post navigation

ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செப்டம்பர் 15ந்தேதி: நாளை தி.மு.க. முப்பெரும் விழா – மு.க.ஸ்டாலின் விருது வழங்குகிறார்

Related Post

இந்தியா தமிழ் நாடு

மேகதாது அணையில் குடிநீருக்காக 5 டி.எம்.சி. மட்டும்; மீதமுள்ள நீர் தமிழகத்துக்கு: டி.கே. சிவகுமார்

இந்தியா தமிழ் நாடு

ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS, MD படிப்புகளை தொடங்க திட்டம்

இந்தியா தமிழ் நாடு

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள்

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புளூட்டோவை நெருக்கமாகப் பார்த்த நியூ ஹொரைசன்ஸ் விண்கலம்

August 20, 2026 Sundar
உலகம்

தோண்டத் தோண்ட தங்கம்… புதுப்பிக்கும் பணியில் புதையல்; தொழிலாளர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி!

August 17, 2026 Sundar
உலகம்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: அவசர முடிவு வேண்டாம் என நிறுவனங்கள் வலியுறுத்தல்

August 14, 2026 Sundar
உலகம்

இளம் வயதினரின் சமூக வலைதள பயன்பாடு… கவனிக்க வேண்டியது ‘நேரம்’ மட்டுமல்ல!

August 10, 2026 Sundar
உலகம்

இந்தோ-பசிபிக் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து: ஆய்வு எச்சரிக்கை

August 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer