காயத்ரி ரகுராம் மோடிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்தவர், பா.ஜ.க-வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாத்தில் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார் காயத்ரி ரகுராம்,

இந்த நிலையில் தற்போது அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க-வில் இருந்து விலகவில்லை, என்று தெரிவித்திருப்பதோடு, பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன், என்று தனது ஆசை தெரியப்படுத்தியுள்ளார்.