நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது, தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில்  நடைபெற்று வருகிறது. ஜோக்கர் இயக்குனர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் கதாநாயகி முடிவாகாமல் இருந்தது.

இந்நிலையில்   பிரபல நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனாலும் கௌதமி மற்றும் இயக்குனர் பாலாவிடம் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. விரைவில் அவர்கள் இந்த செய்தியை அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.