சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கட்டப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வந்தாலும் சென்னை உள்பட பல மாவட்ங்களில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் நடமாட்டம் பகிரங்கமாகவே நடைபெற்று வருகிறது.  இதை உறுதி செய்யும் வகையில், சென்னையில் உள்ள  பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்த  வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுபோல,  கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பள்ளி சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை பலரும் போதைக்கு அடிமையாகி வருகின்றன. சட்டம் ஒழுங்கு  பிரச்சினைகள் எழுந்து வருகிறது.  இதை தடுக்க காவல்துறையினர் கஞ்சா1 கஞ்சா 2 என பல்வேறு பெயர்களை வைத்துக்கொண்டு, போதைப்பொருள் கடத்தலை தடுப்பதாக கூறினாலும், தமிழகத்திற்குபல்வேறு வழிகளில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது  கடல் வழியாக கடத்தல் சம்பவம் அரங்கேறி வருகிறது. போதைப்பொருள் புழக்கம் பள்ளிகள், கல்லூரி அருகே விற்பனை சகஜமாக நடக்கிறது இதுகுறித்து புகார் அளித்தால், புகார் கொடுப்பவர்கள் போதைபொருள் வியாபாரிகளால் தாக்கப்படும் அவலங்களும் நிகழ்கின்றன.

இந்த நிலையில்,  சென்னை  பாரிமுனைர் பகுதியில் போதை சாக்லேட் (கஞ்சா) விற்பனை செய்யப்படுவதாக தி.நகர் உதவி ஆணையரின் தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஜாம்பஜாரில் சோதனை நடத்திய போலீசார், அங்குள்ள பீடை கடை ஒன்றில் போதை சாக்லெட் இருந்தை கண்டறிந்தனர்.  அந்த கடையில் இருந்த  வடமாநில நபரை கைது செய்து அவரிடமிருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளைப் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விசாரணையில் போதை சாக்லேட் விற்பனை செய்தவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரா யாதவ் (41) என்பதும் பீடா கடை நடத்துவது போல மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் யாரிடம் கஞ்சா சாக்லேட் வாங்கினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுபோல,  கோவை அருகே கஞ்சா, போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவையின் பல பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அங்குள்ள பெரியநாயக்கன்பாளையம் அடுத்த மத்தம்பாளையம் பகுதியில் தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனை அடுத்து அவர்களை சோதனை செய்த போது விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா, 208 போதை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் மற்றும் 4 சிரஞ்சுகள் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மூன்று பேரையும் காவல் துறையினர் பெரியநாய்க்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவர்த்தனன், பிரவீன் குமார், நவீன் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.