பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்: கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி இன்று பொறுப்பேற்பு

Must read

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், வாரியத்தின் தலைவராக முறைப்படி சவுரவ் கங்கூலி இன்று பொறுப்பேற்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கென புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்குக்கொள்வதோடு, தங்களின் பொறுப்புகளையும் அதிகாரப்பூர்வமாக இன்று பதிவியும் ஏற்க உள்ளனர்.

அதன்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39வது தலைவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்கூலி இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளார். நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின்னர், கிரிக்கெட் மேம்பாடு தொடர்பாக பல்வேறு முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article