பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ஞாயிறன்று (28-8-2022) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

25வது ஆண்டாக நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் காவடி மற்றும் பால்குடம் தூக்கி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய விநாயகர் கோயிலான ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியதோடு இதனை காண வந்தவர்களுக்கு பிரசாதம் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.