டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல்நாள் கூட்டமே கலைக்கட்டத்தொடங்கி உள்ளது.  தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்prனை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டிஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது நீட் தேர்வு காரணமாக வருங்கால மருத்துவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

கொரோனா  பிரச்சனை, லடாக் எல்லை பிரச்னை, பொருளாதார வீழ்ச்சி என பல்வேறு பிரச்னை களுக்கு இடையே நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் 5 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்திதொடரில் மொத்தமாக 47 மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒருமணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.

அப்போது,  நீட் தேர்வு பிரச்னை குறித்து சபையில், திமுக எம்பி டி.ஆர் பாலு கேள்வி எழுப்பி பேசினார்.  நீட் நுழைவுத்தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் வருங்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிப்பதாகவும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படுவதால் இதுவரை 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 தற்கொலை செய்து கொண்ட 12 மாணவர்களின் நிலைக்கு கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த அனைவருக்கும் இந்த மன்றம் மற்றும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அவர்கள் பிளஸ் 2 ஐ மாநில வாரியம் மூலம் தேர்ச்சி பெற்றனர் & நீட் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது, இதனால், அதை எதிர்கொள்ள முடியவில்லை. பிளஸ்2 தேர்வு முடிந்து  ஒரு மாதத்திற்குள், அவர்கள் நீட் தேர்வில் நுழைய வேண்டும், அவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத் தின் எந்தவொரு விஷயமும் தெரியாத நிலையில்,  மாணவர்கள் உதவியற்றவர்களாகி,  தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், ஆகவே தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்  என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சபா நாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்படும் என்றும், அதில்  திருப்தி அளிக்காவிட்டால் கூடுதல் கேள்விகளை எழுத்து மூலம் கேட்கலாம்.

அசாதாரண சூழ்நிலையில் அமர்வு நடைபெற்று வருவதால், அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.