ஈரோடு: ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில்  அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்துக்கு அதிகாரிகள்  சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனுமதியின்றி கூட்டம் நடத்தியதால் சீல் வைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்நத் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டம் கூடி வருகிறது. இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.

திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி அவசியமாது என்பதால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பிரசாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் நேரு, எவ  வேலு, செந்தில்பாலாஜி உள்பட பலர் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி உள்பட அவரது ஆதரவாளர்கள்  வாக்கு சேகரித்துவருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தை அதிமுகவினர்  தங்களது தேர்தல்  அலுவலகமாக கடந்த சில நாட்களாக பயன்படுத்தி  வந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர், இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று, அதிமுக அலுவலகத்தில் பணம் பட்டுவாடா நடப்பதாக  புகார் வந்துள்ளதாக கூறி, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சென்று சோதனையிட சென்றனர். இதனால், அங்கு இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.  சோதனைக்கு வந்த அதிகாரிகளை மண்டபத்துக்குள் விடாமல் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த மண்டபத்தில் இருந்தவர்களை வெளியேற்றிய காவல்துறையில், மண்டபத்தக்கு சீல் வைத்தனர்.

திமுக அரசின் தூண்டுதலால் அதிகாரிகள் முறையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், திமுகவினரே ஈரோட்டில் உள்ள பெரும்பாலான மண்டபங்களை வாடகைக்கு எடுத்து ஆட்களை குவித்து வைத்துள்ளனர், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்தகொள்கின்றனர்  அதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.