டில்லி

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்த முதியோர் ஓய்வூதியம் பற்றிய முழு விவரங்கள் இதோ

அமைச்சர் அருண் ஜேட்லி இன்று 8% வட்டியை ஓய்வூதியமாக வழங்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஓய்வூதிய பாலிசியை இன்று அறிமுகம் செய்தார்.  அதன் விவரங்களாவது :

ஆயுள் காப்பீட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் இந்த பாலிசியை முழுத்தொகையை முதலில் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.  இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது.  இந்தப் பாலிசி மே 3, 2018 வரை வழங்கப்படும்.

இந்த பாலிசி ஆன்லைனிலும், நேரடியாகவும் வாங்ககூடியவை.  வாங்கப்படும் தொகைக்கு 8% வருட வட்டியை 12ஆகப் பிரித்து மாதாமாதம் வழங்கப்படும்.

இந்த வட்டித்தொகை, மாதா மாதம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என நாலு வகைகளில் வழங்கப்படும்.  பாலிசி தாரர்கள் விருப்பப்படி ஏதாவது ஒரு முறையில் வழங்கப்படும்.  இது 10 வருடங்களுக்கு வழங்கப்படும்.

இந்த பாலிசிக்கு ஜி எஸ் டி யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பாலிசி எடுத்து 3 வருடங்களுக்குப் பிறகு அந்த பாலிசியின் மேல் கடன் வாங்கிக் கொள்ளலாம்.  கடனுக்கான வட்டி, மாதம் தரப்படும் தொகையில் இருந்து பிடித்தம் செய்துக் கொள்ளப்படும்.

ஏதும் மருத்தவ உதவி போன்ற அவசரத் தேவைகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பாலிசியை முடித்துக் கொள்ளலாம்.  அப்படி முடித்துக் கொள்வோருக்கு வாங்கிய தொகையில் 98% வழங்கப்படும்.

பாலிசி தாரர்கள் பத்து வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்தால் முழு தொகையும், வாரிசுகளுக்கு வழங்கப்படும்.