சென்னை

ன்று முதல் தொழிற்சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு அமலாகிறது.

தமிழக அரசு தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்து இருந்தது. பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதுடன், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

ஆயினும் இன்று முதல் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.  இதன்படி, யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே வேளையில் வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும், கைத்தறி, விசைத்தறி போன்றவற்றுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.