டிசம்பர் 15 முதல் மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஆரம்பம்

Must read

சென்னை

ஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தைச் சிவா இயக்கி வருகிறார்.  இந்த படத்தின் இசையமைப்பை டி இமான் கவனிக்க இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது.  ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் 60 வயதைக் கடந்த முதியோர்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது.  ரஜினிகாந்த் 60 வயதைக் கடந்தவர் என்பதாலும் அவருக்கு சில மருத்துவ பிரச்சினைகள் உள்ளதாலும் படப்பிடிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சிவா வரும் 15 ஆம் தேதி முதல் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.  இந்த படப்பிடிப்பு பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article